ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு. – குறள்: 642
– அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள்
கலைஞர் உரை
ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தன் அரசனுக்கு அவன் அரசுறுப்புக்கட்கும் மேம்பாடும் அழிவும் தன் சொல்லால் வருமாதலால், அமைச்சன் தன் சொல்லில் தவறு நேராவாறு போற்றிக்காக்க.
மு. வரதராசனார் உரை
ஆக்கமும் கேடும் சொல்கின்ற சொல்லால் வருதலால் ஒருவன் தன்னுடைய சொல்லில் தவறு நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.
G.U. Pope’s Translation
Since gain and loss in life on speech depend,
From careless slip in speech thyself defend.
– Thirukkural: 642, Power of Speech, Wealth