அளவளாவு இல்லாதான் வாழ்க்கை – குறள்: 523

Thiruvalluvar

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடுஇன்றி நீர்நிறைந் தற்று.
– குறள்: 523

– அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள்



கலைஞர் உரை

உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உறவினத் தொடு உள்ளக் கலப்பில்லாதவன் செல்வவாழ்க்கை ; குளப்பரப்புக் கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போலும்.



மு. வரதராசனார் உரை

சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.



G.U. Pope’s Translation

His joy of life who mingles not with kinsmen gathered round, Is lake where streams pour in, with no encircling bound.

 – Thirukkural: 523, Cherishing one’s kindred, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.