அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி. – குறள்: 245
– அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம்
கலைஞர் உரை
உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அருள் பூண்டவர்க்கு இம்மையிலும் ஒரு துன்பமுமில்லை; இதற்குக் காற்று இயங்குகின்ற வளமுள்ள பெரிய மாநிலத்திலுள்ள மக்களெல்லாரும் சான்றாளராவர்.
மு. வரதராசனார் உரை
அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.
G.U. Pope’s Translation
The teeming earth’s vast realm, round which the wild winds blow, In witness, men of ‘grace’ no woeful want shall know.
– Thirukkural: 245, The Possession of Benevolence, Virtues
Be the first to comment