அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. – குறள்: 555
– அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள்
கலைஞர் உரை
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
குடிகள் அரசனது கொடுங்கோலாட்சியால் துன்பப்பட்டு அதைப்பொறுக்க முடியாது அழுத கண்ணீரன்றோ ; அவ்வரசனின் ஆட்சிச் செல்வத்தை அழிக்கும் படைக்கலம்.
மு. வரதராசனார் உரை
( முறை செய்யாதவனுடைய ) செல்வத்தைத் தேய்த்து அழிக்கவல்ல படை, அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ?
G.U. Pope’s Translation
His people’s tears of sorrow past endurance , are not they Sharp instruments to wear the monarch’s wealth away?
– Thirukkural: 555, The Cruel Sceptre, Wealth
Be the first to comment