குருவிரொட்டி இணைய இதழ்

அல்லவை தேய அறம்பெருகும் – குறள்: 96


அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். – குறள்: 96

– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்



கலைஞர் உரை

தீய செயல்களை  அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால்,
இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

விளைவாற் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை ஆராய்ந்தறிந்து அவற்றைச் செவிக்கினிதாக ஒருவன் சொல்வானாயின், அவனுக்குத் தீவினைப் பயன் குன்ற நல்வினைப் பயன் வளரும் .



மு. வரதராசனார் உரை

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.



G.U. Pope’s Translation

Who seeks out good, words from his lips of sweetness flow;
In him the power of vice declines, and virtues grow.

– Thirukkural: 96, The Utterance of Pleasant Words, Virtues