ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையான் நீளும் குடி. – குறள்: 1022
– அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள்
கலைஞர் உரை
ஆழ்ந்த அறிவும் விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது
பாடுபட்டால் அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்படும் இரண்டினையுமுடைய இடையறாத செயலால்; ஒருவனது குடி உயரும்.
மு. வரதராசனார் உரை
முயற்சி, நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
G.U. Pope’s Translation
The manly act and knowledge full, when these combine In deed prolonged, then lengthens out the race’s line.
– Thirukkural: 1022, The way of Maintaining the Family, Wealth