அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும். – குறள்: 474
– அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள்
கலைஞர் உரை
மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வேற்றரசரோடு பொருந்தி அதற்கேற்ப நடந்துகொள்ளாமலும் ; தன் வலியளவை அறியாமலும் ; தன்னை உயர்வாக மதித்து அவரொடு பகைகொண்ட வரசன் ; விரைந்து கெடுவான் .
மு. வரதராசனார் உரை
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல். தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
G.U. Pope’s Translation
Who not agrees with those around, no moderation knows, In self-applause indulging, swift to ruin goes.
– Thirukkural: 474,The Knowledge of Power, Wealth