குருவிரொட்டி இணைய இதழ்

அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு – குறள்: 682


அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
– குறள்: 682

– அதிகாரம்: தூது, பால்: பொருள்



கலைஞர் உரை

தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள்
அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம் அரசனிடத்து அன்புடைமையும்; தம் வினைக்கு அறிய வேண்டியவற்றை அறிந்திருத்தலும்;செவிக்கும் உள்ளத்திற்கும் இனியனவும் பொருட் கொழுமையுள்ளனவும் தகுந்தனவுமான சொற்களை ஆராய்ந்தமைத்துக் கூறும் நாவன்மையும்;தூது சொல்வார்க்கு இன்றியமையாத மூன்று திறங்களாம்.



மு. வரதராசனார் உரை

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.



G.U. Pope’s Translation

Love, knowledge, power of chosen words, three things, Should he possess who speaks the words of kings.

 – Thirukkural: 682, The Envoy, Wealth