அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. – குறள்: 513
– அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள்
கலைஞர் உரை
அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அரசனிடத்தன்பும், அரசனுக்கு ஆவனவற்றையும் வினைக்கு வேண்டிய வற்றையும் அறியும் அறிவும், வினைசெய்தற்கண் கலங்காமையும், பொருள் கைசேர்ந்தவழியும் தீயவழியாற் பொருள் வருமிடத்தும் அதன்மேல் ஆசையின்மையும் ஆகிய இந்நாற்குணங்களையும் உறுதியாகவுடையவன் மேலதே அரசன் வினையை விட்டிருக்குந் தெளிவாம்.
மு. வரதராசனார் உரை
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.
G.U. Pope’s Translation
A loyal love with wisdom, clearness, mind from avarice free;
Who hath these four good gifts should ever trusted be.
– Thirukkural: 513, Selection and Employment, Wealth
Be the first to comment