குருவிரொட்டி இணைய இதழ்

அன்பின் வழியது உயிர்நிலை -குறள்: 80


அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
.
– குறள்: 80

– அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்;
இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அன்பின் வழிப்பட்ட உடம்பே உயிர்நிலை என்று சிறப்பித்துச் சொல்லப் பெறுவது; அவ்வன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்புகள் உயிரில்லாது எலும்பைத் தோலாற் போர்த்த போர்ப்புக்களே.



மு. வரதராசனார் உரை

அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும்.



G.U. Pope’s Translation

Bodies of loveless men are bony framework clad with skin; Then is the body seat of life, when love resides within.

 – Thirukkural: 80, The Possession of Love, Virtues