குருவிரொட்டி இணைய இதழ்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் – குறள்:71

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்.
– குறள்: 71

– அதிகாரம்: அன்பு உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பம் காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டு விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவரது அன்பிற்கும் அதைப் பிறர் அறியாதவாறு அடைத்துவைக்கும் தாழ்ப்பாள் உளதோ? தம்மால் அன்புசெய்யப் பட்டாரது துன்பங்கண்டவிடத்து அன்புடையாரின் துன்புறுங் கண் சிந்தும் நீரே அவருள்ளத்திலுள்ள அன்பை எல்லாரும் அறியப் பறைசாற்றிவிடும்



மு.வரதராசனார் உரை

அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.



G.U. Pope’s Translation

And is there bar that can even love restrain?
The tiny tear shall make the lover’s secret plain.

Thirukkural: 71, The Possession of Love, Virtues