குருவிரொட்டி இணைய இதழ்

அன்புஇலன் ஆன்ற துணைஇலன் – குறள்: 862

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.
குறள்: 862

– அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள்



கலைஞர் உரை

உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல்,
தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன் சுற்றத்தின்மேல் அன்பில்லாதவனாகவும்; சிறந்த துணையில்லதவனாகவும், அவற்றோடுதானும் வலிமையில்லாதவனாகவும் உள்ள ஒருவன்; பகைவன் வலிமையை எங்ஙனந் தொலைப்பான்?



மு. வரதராசனார் உரை

ஒருவன் அன்புஇல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதவனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்?



G.U. Pope’s Translation

No kinsman’s love, no strength of friends has he; How can he bear his foeman’s enmity?

Thirukkural: 862, The might of Hatred, Wealth.

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link