அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்இரண்டும்
பண்புஉடைமை என்னும் வழக்கு. – குறள்: 992
– அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள்
கலைஞர் உரை
அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்தநெறியாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
எல்லார்மேலும் அன்புடைமையும் எல்லா நல்லிணக்கமும் அமைந்த குடியிற் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும் ;பண்புடைமையென்னும் ஒழுக்கத்திற்கு இன்றியமையாத இயல்களாம்.
மு. வரதராசனார் உரை
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.
G.U. Pope’s Translation
Benevolence and high-born dignity,
These two are beaten paths of courtesy.
– Thirukkural: 992, Perfectness, Wealth
Be the first to comment