குருவிரொட்டி இணைய இதழ்

அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம் – குறள்: 681


அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம்
பண்புஉடைமை தூதுஉரைப்பான் பண்பு.
– குறள்: 681

– அதிகாரம்: தூது, பால்: பொருள்



கலைஞர் உரை

அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர்
பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய
தகுதிகளாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மக்களிடத்து அன்பாயிருத்தலும்; ஆட்சித் தொழிற்கேனும் அமைச்சுத் தொழிற்கேனும் ஆசிரியத் தொழிற்கேனும் ஏற்ற வகுப்பிலும் குடும்பத்திலும் பிறந்திருத்தலும்; அரசர் விரும்பத்தக்க சிறந்த தன்மைகளுடையனா யிருத்தலும்; தூது சொல்வானுக்கு உரிய இலக்கணங்களாம்.



மு. வரதராசனார் உரை

அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.



G.U. Pope’s Translation

Benevolence, high birth the courtesy kings love;-
These qualities the envoy of a king approve.

 – Thirukkural: 681, The Envoy, Wealth