குருவிரொட்டி இணைய இதழ்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் – குறள்: 543


அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
– குறள்: 543

– அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச்
செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஐயரும் பார்ப்பாருமான இருவகைத் தமிழ் அந்தணரும் இயற்றிய பல்துறை நூல்கட்கும் மக்களின் அறவொழுக்கத்திற்கும் அடிமணையாயிருப்பது ; அரசனின் செங்கோலே.



மு. வரதராசனார் உரை

அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.



G.U. Pope’s Translation

Learning and virtue of the sages spring,
From all – controlling sceptre of the king.

 – Thirukkural: 543, The Right Sceptre, Wealth