அங்கணத்துள் உக்க அமிழ்துஅற்றால் தம்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல். – குறள்: 720
– அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள்
கலைஞர் உரை
அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது,
தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அறிஞராவார் அறிவால் தம் இனத்தவரல்லாதா ரவைக்கண் நிகழ்த்தும் அரும்பொருட் சொற்பொழிவு; சாய்கடைக்குள் ஊற்றிய பாலைப்போலும்.
மு. வரதராசனார் உரை
தம் இனத்தவர் அல்லாதவரின் கூட்டத்தின்முன் ஒரு பொருள் பற்றிப் பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.
G.U. Pope’s Translation
Ambrosia in the sewer spilt, is word,
Spoken in presence of the alien herd.
– Thirukkural: 720, The Knowledge of the Council Chamber, Wealth