அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு. – குறள்: 863
– அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள்
கலைஞர் உரை
அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும்,இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
போருக்கு அஞ்சுபவனாகவும்; அறியவேண்டியவற்றை அறியாதவனாகவும்; ஈகைத் தன்மையில்லாதவனாகவும் இருப்பவன்; தன்பகைவர்க்கு மிக எளியவனாவான்.
மு. வரதராசனார் உரை
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால், அவன் பகைவர்க்கு மிக எளியவன்.
G.U. Pope’s Translation
A craven thing! knows nought, accords with none, gives nought away; To wrath of any foe he falls an easy prey.
– Thirukkural: 863, The might of Hatred, Wealth.
Be the first to comment