அந்தணர் என்போர் அறவோர்மற்று – குறள்: 30

Thiruvalluvar

அந்தணர் என்போர் அறவோர்மற்று

எவ்உயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான். – குறள்: 30

– அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம்



கலைஞர் உரை

அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும்
சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் செம்மையான குளிர்ந்த அருளைப் பூண்டொழுகுதலால்; அந்தணரென்று சிறப்பித்துச் சொல்லப்படுபவர் துறவியரே.



மு. வரதராசனார் உரை

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.



G.U. Pope’s Translation

Towards all that breathe, with seemly graciousness adorned they live;
And thus to virtue’s son’s the name of ‘Anthanar’ men give.

 – Thirukkural: 30, The Greatness of Ascetics, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.