அறைபறை அன்னர் கயவர்தாம் – குறள்: 1076

Thiruvalluvar

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துஉரைக்க லான். – குறள்: 1076

– அதிகாரம்: கயமை, பால்: பொருள்



கலைஞர் உரை

மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில்,
ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தாம் தம் காதாற்கேட்ட மருமச் செய்திகளைக் கொண்டுசென்று பிறர்க்கெல்லாஞ் சொல்லுதலால்; கீழ்மக்கள் விளம்பரஞ் செய்தற்குக் கொட்டப்படும் பேரிகையொப்பர்.



மு. வரதராசனார் உரை

கயவர், தாம் கேட்டறிந்த மறைபொருளைப் பிறர்க்கு வலியக்கொண்டுபோய்ச் சொல்லுவதால், அறையப்படும் பறை போன்றவர்.



G.U. Pope’s Translation

The base are like the beaten drum; for when they hear, The sound the secret out in every neighbour’s ear.

 – Thirukkural: 1076, Baseness, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.