குருவிரொட்டி இணைய இதழ்

அறம்கூறான் அல்ல செயினும் – குறள்: 181


அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது.
– குறள்: 181

– அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம்



கலைஞர் உரை

அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் அறம் என்னுஞ் சொல்லையுஞ் சொல்லாது அறமல்லாதவற்றைச் செய்யினும்; ஒருவரையும் பற்றிப் புறங்கூறான் என்று உலகத்தாராற் சொல்லப்படுதல் நன்றாம்.



மு. வரதராசனார் உரை

ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும் மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.



G.U. Pope’s Translation

Though virtuous words his lips speak not, and all his deeds are ill, If neighbour he defame not, there’s good within him still.

 – Thirukkural: 181, Not Backbiting, Virtues