அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கள்பண்பு இல்லா தவர். – குறள்: 997
– அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள்
கலைஞர் உரை
அரம்போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும்,
மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நன்மாந்தர்க்குரிய பண்பில்லாதவர்; அரத்தின் கூர்மை போலுங் கூரிய மதியுடையரேனும் ; அறுக்குங் கூர்மையில்லாத மரத்தையே ஒப்பர்.
மு. வரதராசனார் உரை
மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், அரம்போல் கூர்மையான அறிவு உடையவராயினும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.
G.U. Pope’s Translation
Though sharp their wit as file, as blocks they must remain,
Whose souls are void of ‘courtesy humane’.
– Thirukkural: 997, Perfectness, Wealth
Be the first to comment