அறம்சாரா நல்குரவு ஈன்றதா – குறள்: 1047

Thiruvalluvar

அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். – குறள்: 1047

– அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள்



கலைஞர் உரை

வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போலதான் கருதுவாள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறத்தோடு பொருந்தாத வறுமையை யுடையவன்; தன்னைப் பெற்று வளர்த்த தாயாலும் அயலான்போல புறக்கணிக்கப்படுவான்.



மு. வரதராசனார் உரை

அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்ற தாயாலும் அவன் அயலனைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.



G.U. Pope’s Translation

From indigence devoid of virtue’s grace,
The mother e’en that bare, estranged, will turn her face.

 – Thirukkural: 1047, Poverty, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.