குருவிரொட்டி இணைய இதழ்

அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை – குறள்: 185


அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும். – குறள்: 185

– அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம்



கலைஞர் உரை

ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக் கொண்டேஅவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

புறங்கூறுவா னொருவன் அறம் நல்ல தென்று சொல்லினும், அவன் அதை நெஞ்சாரச் சொல்கின்றானல்லன் என்னும் உண்மை; அவன் புறஞ் சொல்லுதற்குக் கரணியமான சிறுதன்மையால் அறியப்படும்.



மு. வரதராசனார் உரை

அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மை, ஒருவன் மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.



G.U. Pope’s Translation

The slanderous meanness that an absent friend defames, ‘This man is words owns virtue, not in heart,’ proclaims.

 – Thirukkural: 185, Not Backbiting, Virtues