அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் – குறள்: 163

Thiruvalluvar

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்
பேணாது அழுக்கறுப் பான். – குறள்: 163

– அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம்



கலைஞர் உரை

அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் ஆகிய பேறுகளைத் தனக்கு வேண்டாதவனென்று சொல்லப்படுகின்றவன்; பிறன் செல்வங் கண்ட விடத்து அதற்கு மகிழாது பொறாமைப்படுபவனாவன்.



மு. வரதராசனார் உரை

தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத்தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் பொறாமைப்படுவான்.



G.U. Pope’s Translation

Nor wealth nor virtue does that man desire, ’tis plain Whom others’ wealth delights not, feeling envious pain.

 – Thirukkural: 163, Not envying, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.