குருவிரொட்டி இணைய இதழ்

அறன்அறிந்து வெஃகா அறிவுஉடையார் – குறள்: 179


அறன்அறிந்து வெஃகா அறிவுஉடையார்ச் சேரும்
திறன் அறிந்துஆங்கே திரு.
– குறள்: 179

– அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம்



கலைஞர் உரை

பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இது அறமென்று தெளிந்து பிறர்பொருளை விரும்பாத அறிவுடையாரிடத்து; திருமகள் தான் அடைதற்கான திறங்களையறிந்து அவற்றின்படியே சென்றடைவாள்.



மு. வரதராசனார் உரை

அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.



G.U. Pope’s Translation

Good fortune draws anigh in helpful time of need, To him who, schooled in virtue, guards his soul from greed.

 – Thirukkural: 179, Not Coveting, Virtues