அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு. – குறள்: 32
– அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்
கலைஞர் உரை
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவர்க்கு அறஞ்செய்வதிலும் சிறந்த ஆக்கவழியுமில்லை, அதை மறந்து செய்யாது விடுவதினும் பெரிய கெடுதல் வழியுமில்லை.
மு. வரதராசனார் உரை
ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.
G.U. Pope’s Translation
No greater gain than virtue aught can cause;
No greater loss than life oblivious of her laws.
– Thirukkural: 32, Assertion of the strength of virtue, Virtues