அறிந்துஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தான்என்று ஏவற்பாற்று அன்று. – குறள்: 515
– அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள்
கலைஞர் உரை
ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல்
வேறோருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
எவ்வினையுந்தான் ; செய்யும் வழிகளை யறிந்து செயலாலும் இடையூறுகளாலும் வருந்துன்பங்களைப் பொறுத்துச் செய்து முடிக்க வல்லானையல்லது; இவன் நம் மிடத்துச் சிறந்த அன்புடையவனென்று வேறு எவனையும் ஏவத்தக்கதன்று.
மு. வரதராசனார் உரை
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத் தாங்கிச் செய்துமுடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்று கருதி ஒரு செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.
G.U. Pope’s Translation
No specious fav’rite should the king’s commision bear, But he that knows, and work performs with patient care
– Thirukkural: 515, Selection and Employment, Wealth
Be the first to comment