
அறிவுஉடையார் ஆவது அறிவார் அறிவுஇலார்
அஃது அறிகல்லா தவர். – குறள்: 427
– அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்
கலைஞர் உரை
ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அறிவுடையார் எதிர்காலத்தில் நிகழக் கூடியதை முன்னறிய வல்லவர்; அறிவில்லாதவர் அதனை முன்னறியும் ஆற்றலில்லாதவர்.
மு. வரதராசனார் உரை
அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
Be the first to comment