அறிவுடையார் எல்லாம் உடையார் – குறள்: 430

அறிவுடையார் எல்லாம் உடையார்

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடையர் ஏனும் இலர்.           –   குறள்: 430

                        – அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்


கலைஞர் உரை

அறிவு  இல்லாதவர்களுக்கு  வேறு  எது இருந்தாலும் பெருமையில்லை;
அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.


தேவநேயப் பாவாணர் உரை

அறிவு உடையார் எல்லாம் உடையார் -அறிவுடையார் வேறொன்றுமிலராயினும் எல்லாம் உடையவராவர்; அறிவு இலார் என் உடையரேனும் இலர் – அறிவில்லாதவர் பிறவெல்லா முடையராயினும் ஒன்றுமில்லாதவராவர்.


மு.வரதராசனார்  உரை

அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.


G.U.Pope’s Translation

The wise is rich, with ev’ry blessing blest;
The fool is poor, of everything possessed.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.