அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் – குறள்: 684

Thiruvalluvar

அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுஉடையான் செல்க வினைக்கு.
– குறள்: 684

– அதிகாரம்: தூது, பால்: பொருள்



கலைஞர் உரை

தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இயற்கையான அறிவும்; கண்டார் மதிக்குந் தோற்றப் பொலிவும்; ஆராய்ச்சியோடு கூடிய கல்வியும்; ஆகிய இம் முன்றும் நிறைந்தவன்; வேற்றரசரிடம் தூதனாகச் செல்க.



மு. வரதராசனார் உரை

இயற்கை அறிவு, விரும்பத்தக்க தோற்றம், ஆராய்ச்சி உடைய கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்



G.U. Pope’s Translation

Sense, goodly grace, and knowledge exquisite,
Who hath these three for envoy’s task is fit.

 – Thirukkural: 684, The Envoy, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.