அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை – குறள்: 254

Thiruvalluvar

அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல்
பொருள்அல்லது அவ்ஊன் தினல்.

– குறள்: 254

– அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம்



கலைஞர் உரை

கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அருள் என்பது என்னது எனின் கொல்லாமை; அருளல்லாதது எதுவெனின் கொல்லுதல் ; ஆதலால், அக்கொல்லுதலால் வந்த ஊனைத் தின்பது கரிசு (பாவம்).



மு. வரதராசனார் உரை

அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல்; அருளல்லாதது எது என்றால் உயிரைக் கொல்லுதல்; அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.



G.U. Pope’s Translation

‘What’s grace, or lack of grace?’To kill’ is this , that ‘not to kill’; To eat dead flesh can never worthy end fulfil.

 – Thirukkural: 254, The Renunciation of Flesh, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.