அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். – குறள்: 243
– அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம்
கலைஞர் உரை
அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த
துன்ப உலகில் உழலமாட்டார்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இருள் திணிந்த துன்பவுலகமாகிய நரகத்துட் புகுதல்; அருள் நிறைந்த நெஞ்சையுடைய துறவியருக் கில்லை.
மு. வரதராசனார் உரை
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
G.U. Pope’s Translation
They in whose breast a ‘ gracious kindliness ‘ resides, See not the gruesome world, where darkness drear abides.
– Thirukkural: 243, The Possession of Benevolence, Virtues
Be the first to comment