அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழ கெடும். – குறள்: 176
– அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம்
கலைஞர் உரை
அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அன்பை மட்டுமன்றி அருளையும் விரும்பி இல்லறத்தின்கண் நின்றவன், பிறர் பொருளை விரும்பி அதைக் கைப்பற்றத் தீய வழிகளை ஆராய்ந்தெண்ணிய மட்டிற்கெட்டு விடுவான்.
மு. வரதராசனார் உரை
உரைஅருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
G.U. Pope’s Translation
Though, grace desiring, he in virtue’s way stand strong, He’s lost who wealth desires, and ponders deeds of wrong.
– Thirukkural: 176, Not Coveting, Virtues