குருவிரொட்டி இணைய இதழ்

அருவினை என்ப உளவோ – குறள்: 483


அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
– குறள்: 483

– அதிகாரம்: காலமறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

தேவையான கருவிகளுடன் உரிய நேரத்தையும் அறிந்து
செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சிறந்த கருவியொடு தகுந்த காலமறிந்து செய்வாராயின் ; அரசர்க்கு முடித்தற்கரிய வினைகளென்று சொல்லப்படுவன உளவோ ? இல்லை .



மு. வரதராசனார் உரை

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ?



G.U. Pope’s Translation

Can any work be hard in very fact,
If men use fitting means in timely act?

Thirukkural: 483, Hostility, Knowing the fitting time