குருவிரொட்டி இணைய இதழ்

அற்றால் அளவு அறிந்து உண்க – குறள்: 943

அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.    – குறள்: 943

          – அதிகாரம்: மருந்து, பால்: பொருள்

 

கலைஞர் உரை: 

உண்ட  உணவு  செரித்ததையும்,  உண்ணும்   உணவின்  அளவையும் அறிந்து உண்பது, நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை

முன்னுண்டது செரித்துவிட்டால் பின்னுண்பதைச் செரிமான ஆற்றல், பசி, பருவம், உழைப்பு, உணவுவலிமை முதலியவற்றின் அளவறிந்து, உடல்நிலைக்கும் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப அளவாக உண்ணுக; அங்ஙனம் உண்பதே பெறற்கரிய மாந்தனுடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலங் கொண்டுசெலுத்தும் வழியாகும்.

மு. வரதராசனார் உரை

முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும்; அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.

G.U. Pope’s Translation

Who has a body gained may long the gift retain,
If, food disgested well, in measure due he eat again.