குருவிரொட்டி இணைய இதழ்

அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் – குறள்: 1007


அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகுநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று. – குறள்: 100
7

– அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள்



கலைஞர் உரை

வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த
அழகியொருத்தி், தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப்
போன்றது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒரு பொருளுமில்லாதார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடாதவனது செல்வம் வீணாய்க் கழிதல் , குணத்திற்சிறந்த கட்டழகி யொருத்தி மணஞ்செய்து கொடுப்பாரின்மையால் கணவனின்றித் தனித்தவளாய் மூத்த தன்மைத்து.



மு. வரதராசனார் உரை

பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடைய செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.



G.U. Pope’s Translation

Like woman fair in lonelihood who aged grows, Is wealth of him on needy men who nought bestows.

 – Thirukkural: 1007, Wealth without Benefaction, Wealth