குருவிரொட்டி இணைய இதழ்

அற்றேம்என்று அல்லற் படுபவோ – குறள்: 626


அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்.
– குறள்: 626

– அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமேயென்று மகிழ்ந்து அதைக்
காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

செல்வக் காலத்தில் யாம் இது பெற்றேமென்று மகிழ்ந்து கையழுத்தங் கொண்டு அதைக் காத்துக் கொள்ளுதலை அறியாதார்; வறுமைக் காலத்தில் யாம் செல்வத்தை யிழந்தேமென்று துயரப்படுவரோ ? படார்.



மு. வரதராசனார் உரை

செல்வம் வந்தபோது இதைப் பெற்றோமே என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர், வறுமை வந்தபோது இழந்தோமே என்று அல்லல்படுவாரோ?



G.U. Pope’s Translation

Who boasted not of wealth, nor gave it all their heart, Will not bemoan the loss, when prosperous days depart.

 – Thirukkural: 626, Hopefulness in Trouble, Wealth