குருவிரொட்டி இணைய இதழ்

ஆற்றின் வருந்தா வருத்தம் – குறள்: 468


ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
– குறள்: 468

அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய் விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தக்க வழியாற் கருமத்தை முயலாத முயற்சி ; பின்பு பலர் துணை நின்று கருமங்கெடாமற் காப்பினும் கெட்டுப் போகும் .



மு. வரதராசனார் உரை

தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று (அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகி விடும்.



G.U. Pope’s Translation

On no right system if man toil and strive,
Though many men assist, no work can thrive.

 – Thirukkural: 468, Acting after due Consideration, Wealth