குருவிரொட்டி இணைய இதழ்

அவ்வித்து அழுக்காறு உடையானை – குறள்: 167


அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். – குறள்: 167

– அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம்



கலைஞர் உரை

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறராக்கங் கண்டவிடத்துப் பொறாமை கொள்பவனை; செங்கோலத்தினளாகிய திருமகள் தானும் பொறாது தன் அக்கையாகிய மூதேவிக்குக் காட்டி விட்டு நீங்கும்.



மு. வரதராசனார் உரை

பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.



G.U. Pope’s Translation

From envious man good fortune’s goddess turns away, Grudging him good, and points him out misfortune’s prey.

 – Thirukkural: 167, Not envying, Virtues