ஆயும் அறிவினர் அல்லார்க்கு – குறள்: 918

Thiruvalluvar

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்ப
மாய மகளிர் முயக்கு.
குறள்: 918

– அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள்.



கலைஞர் உரை

வஞ்சக எண்ணங்கொண்ட “பொதுமகள்” ஒருத்தி யிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட “மோகினி மயக்கம்” என்று கூறுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அழகு , ஒப்பனை, நளினம், தளுக்கு, ஆடல், பாடல் முதலியவற்றால் ஆடவரை, சிறப்பாக இளைஞரை மயக்கி வஞ்சிக்கும் விலை மகளிரின் தழுவலை; அவ்வஞ்சனையை ஆராய்ந்தறியும் அறிவில்லார்க்குக் காமினிப் பேய் தாக்கு என்பர் அறிஞர்.



மு. வரதராசனார் உரை

வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவர்க்கு அணங்கு தாக்கு (மோகினி மயக்கு) என்று கூறுவர்.



G.U. Pope’s Translation

As demoness who lures to ruin, woman’s treacherous love
To men devoid of wisdom’s searching power will prove.

Thirukkural: 918, Wanton Women, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.