அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர். – குறள்: 807
– அதிகாரம்: பழைமை, பால்: பொருள்
கலைஞர் உரை
தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைக்
செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார்.
.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அன்போடு கூடிப் பழைமையாக வந்த நட்பையுடையார், தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றைச் செய்தாராயினும் அவர்பால் அன்பு நீங்கார்.
மு. வரதராசனார் உரை
அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவு தரும் செயல்களைப் பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பார்.
G.U. Pope’s Translation
True friends, well versed in loving ways,
Cease not to love, when friend their love betrays.
– Thirukkural: 807, Familiarity, Wealth