குருவிரொட்டி இணைய இதழ்

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி – குறள்: 461


அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
– குறள்: 461

அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று
விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வினைமேற்கொள்ளும் போது அன்று அதனால் அழிவதையும்; அழிந்தாற்பின் ஆவதையும்; வினை முடிந்தபின் தொடர்ந்து வரும் ஊதியத்தையும் ;ஒப்பு நோக்கி ஆராய்ந்து தக்கதாயின் செய்க, தகாததாயின் விட்டு விடுக.



மு. வரதராசனார் உரை

(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும், அழிந்தபின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.



G.U. Pope’s Translation

Expenditure, return,and profit of the deed
In time to come; weigh these-than to the act proceed.

 – Thirukkural: 461, Acting after due Consideration , Wealth