அழிவுஇன்று அறைபோகாது ஆகி வழிவந்த
வன்க ணதுவே படை. – குறள்: 764
– அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள்
கலைஞர் உரை
எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும்,
பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
போரின் கண் தோல்வியடைதலின்றி; பகைவரால் எங்ஙனமுங் கீழறுக்கப் படாததாய்; தொன்று தொட்டுத் தலைமுறையாக வளர்ந்து வந்த வன்மறத்தை யுடையதே; சிறந்த படையாவது.
மு. வரதராசனார் உரை
(போர்முனையில்) அழிவு இல்லாததாய், (பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டு வந்த அஞ்சாமை உடையதே படையாகும்..
G.U. Pope’s Translation
That is a host, by no defeats, by no desertions shamed,
For old hereditary courage famed.
– Thirukkural: 764, The Excellence of an Army, Wealth