குருவிரொட்டி இணைய இதழ்

அழுக்காறு எனஒரு பாவி – குறள்: 168


அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்று,
தீயுழி உய்த்து விடும். – குறள்: 168

– அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம்



கலைஞர் உரை

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத்
தீயவழியிலும் அவனை விட்டுவிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பொறாமை யென்று சொல்லப்படும் ஒப்பற்ற கரிசன் (பாவி) ததன்னை யுடையவனை இம்மைக்கண் செல்வங்கெடுத்து மறுமைக்கண் நரகத்திற் புகுத்தி விடுவான்.



மு. வரதராசனார் உரை

பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தையும் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்திவிடும்.



G.U. Pope’s Translation

Envy, embodied ill, incomparable bane,
Good fortune slays, and soul consigns to fiery pain.

 – Thirukkural: 168, Not envying, Virtues