ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. – குறள்: 656
– அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள்
கலைஞர் உரை
பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக் கூடாது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தன்னைப் பெற்ற தாயின் பசியைக்கண்டு வருந்தும் வறியனாயினும்; அத் தாயின் பசியைத் தணித்தற் பொருட்டு அறிவுடையோர் பழிக்கும் வினைகளை ஒருவன் செய்யா தொழிக.
மு. வரதராசனார் உரை
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக்கூடாது.
G.U. Pope’s Translation
Though her that bore thee hung’ring thou behold, no deed Do thou, that men of perfect soul have crime decreed.
– Thirukkural: 656, Purity in Action, Wealth