குருவிரொட்டி இணைய இதழ்

ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் – குறள்: 1059


ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை. – குறள்: 1059

– அதிகாரம்: இரவு, பால்: பொருள்



கலைஞர் உரை

இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கரத்த லில்லா நெஞ்சினையுடைய கடமையறிவார் முன்நின்று அவரிடத்து இரத்தலும்; இரப்போர்க்கு ஓர் அழகுடையதாம்.



மு. வரதராசனார் உரை

பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவரிடத்தில் என்ன புகழ் உண்டாகும்?



G.U. Pope’s Translation

What glory will there be to men of generous soul.
When none are found to love the askers’ role?

 – Thirukkural: 1059, Mendicancy, Wealth