எளிதுஎன இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. – குறள்: 145
– அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம்
கலைஞர் உரை
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம்
முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பின்விளைவு கருதாது இன்பம் ஒன்றையே நோக்கி அதையடைவது எளிதென்று பிறன் மனைவியின் கண் நெறிகடந்தொழுகுபவன்; தீராது எப்போதும் நிற்கும் தன் பழியையும் தன்குடிப்பழியையும் அடைவான்.
மு. வரதராசனார் உரை
இச் செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறிதவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.
G.U. Pope’s Translation
‘Mere triflel’ saying thus, invades the home; so he ensures. A gain of guilt that deathless aye endures.
– Thirukkural: 145, Not Coveting Another’s Wife, Virtues
Be the first to comment