எல்லாப் பொருளும் உடைத்தாய் – குறள்: 746

Thiruvalluvar

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும்
நல்ஆள் உடையது அரண்.
– குறள்: 746

– அதிகாரம்: அரண், பால்: பொருள்



கலைஞர் உரை

போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும்,
களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசனும் படைமறவரும் குடிகளுமாகிய அகத்தாரெல்லார்க்கும் வேண்டிய பொருள்களை யெல்லாம் உள்ளே கொண்டதாய்; நொச்சிமறவர் புண்பட்டும் மடிந்தும் விழவிழ உடனுடன் அவர் நின்ற இடத்திற்கு வந்து பொருதுதவும் நன்மறவரை யுடையதே; சிறந்த கோட்டையரணாவது.



மு. வரதராசனார் உரை

தன்னிடம் உள்ளவர்க்கு (வேண்டிய) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல வீரர்களை உடையது அரண் ஆகும்.



G.U. Pope’s Translation

A fort, with all munitions amply stored,
In time of need should good reserves afford.

 – Thirukkural: 746 The Fortification, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.