எல்லைக்கண் நின்றார் துறவார் – குறள்: 806

Thiruvalluvar

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
– குறள்: 806

– அதிகாரம்: பழைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நட்புவரம்பு கடவாது. அதன் எல்லைக்குள் நிலைத்து நின்றவர்; பழைமையைத் தம்மோடு பழகிவந்து துன்பில் திரியாது நின்றவரின் நட்பை; அவரால் தமக்குக் கேடுவந்தவிடத்தும் விடார்.



மு. வரதராசனார் உரை

உரிமைவாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவு நேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவுகொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிடமாட்டார்.



G.U. Pope’s Translation

Who stand within the bounds quit not, though loss impends,
Association with the old familiar friends.

Thirukkural: 806, Familiarity, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.