எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். – குறள்: 582
– அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள்
கலைஞர் உரை
நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும்
எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
எல்லாரிடத்தும் நிகழ்பவை யெல்லா வற்றையும் எப்போதும் ஒற்றால் விரைந்து அறிதல் ; அரசன் கடமையாம்.
மு. வரதராசனார் உரை
எல்லாரிடத்திலும்நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும்(ஒற்றரைக்கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
G.U. Pope’s Translation
Each day, of every subject every deed,
‘Tis duty of the king to learn with speed.
– Thirukkural: 582, Detectives, Wealth